அம்மா அன்பின் சிகரம் நீ
அருளைப் பொழியும் முகிலும் நீ
அம்மா அழகின் முழுமை நீ
அம்மா என்றதும் கனிபவள் நீ
அம்மா அன்பின் சிகரம் நீ
1. மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்
மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ (2)
இயேசுவை அணைத்த கரங்களினால்
சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே
2. புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்
பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ (2)
மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்
மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ