கோவிலும் நீயே குருக்களும் நீயே
கோபுர தெரிசனம் நீயே
கோகுலம் தாவீது கோமளம் நீயே
கோதையர் தெய்வமும் நீயே
1. கோடையும் கொண்டல் வாடையும் தென்றல்
குணமதன் சக்தியும் நீயே
கோதில்லாச் சித்தர் இறைவியும் நீயே
குருபரன் அன்னையும் நீயே
2. காவியம் நீயே கண்மணி நீயே
கடிப்பகை பயங்கரி நீயே
கன்னியர் ஒழுக்கம் நடையுடை அடக்கம்
கற்பலங் காரியும் நீயே
3. கரையிலும் நீயே கடலிலும் நீயே
கவினுயர் தண்டலும் நீயே
கலையிலும் நீயே நிலையிலும் நீயே
கற்பக விருட்சமும் நீயே
4. பூவிலும் நீயே நாவிலும் நீயே
புதுமைகள் அனைத்தும் நீயே
பூர்வசு கந்த ஆனந்த ஞான
புனிதம னோஹரம் நீயே
5. பூரணம் நீயே ஆரணம் நீயே
பூசையில் வசனமும் நீயே
பூதலம் ஆதி சாபவி மோசன
புண்ணிய தீர்த்தமும் நீயே
6. பாவிலும் நீயே பாலிலும் நீயே
படைப்புகள் முழுவதும் நீயே
பரமமே இன்பப் பாதையும் நீயே
பரிதிமீன் மதிசுடர் நீயே
7. பழகுமெய் யன்பர் பந்தியில் நீயே
பாவிகள் தஞ்சமும் நீயே
பார்புகழ் மந்தர நகரம் எழுந்த
பனிமயத் தாய்மரி யாயே