தேவப்பிதா என்றன் மேய்ப்பனல்லோதேவப்பிதா என்றன் மேய்ப்பனல்லோ 
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே 
ஆவலதாய் என்னை பைம்புன் மேல் 
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

1. ஆத்துமந் தன்னை குளிரப் பண்ணி 
அடியேன் கால்களை நீதியென்னும் 
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் 
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும் 
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே 
வானபரன் என்னோடிருப்பார் 
வளைதடியும் கோலுமே தேற்றும்

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி 
பாங்காய் எனக்கென் றேற்படுத்தி 
சுக தைலம் கொண்டென் தலையை 
சுபமாய் அபிஷேகம் செய்குவார்

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் 
அருளும் நலமுமாய் நிரம்பும் 
நேயன் வீட்டினில் சிறப்போடே 
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்