அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்னைக்குக் கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் - 2


1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த

முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தாள் (2)

மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள் - 2

தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்


2. பாவமதால் மனிதன் அருளிழந்தான் - அன்று

பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)

பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2

பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்