சகாயத் தாயே எங்கள் சந்தோசம் நீயே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சகாயத் தாயே எங்கள் சந்தோசம் நீயே

சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே (2)

உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்

கொண்டாடி நன்றி பொழிந்தோம் (2)


1. மாதா நீ ஈன்ற இயேசு எங்கள் தெய்வம்

நீதான் அவர் சொன்ன யாவும் செய்த நெஞ்சம் (2)

மரியே மாமரியே எங்கள்நல் மாதிரியே -2

எம்மையுன் பிள்ளைகளாய் அரவரணத்தாயே - உம்மை......


2. அம்மா உன்பாதம் வீழ்ந்துகிடக்கும் மலர்கள்

அன்பும் நிம்மதியும் வேண்டும் எங்கள் மனங்கள் (2)

உன்னையே சரணடைந்தோம் உன்னருள்கரம் விழைந்தோம் -2

இன்னலில் இடராமல் நல்வழிநடக்க - உம்மை......