♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவே என் தேவனே நீரே என் வாழ்வில் ஜீவனே
நான் பாடுவேன் புது வசந்தமே
என்றும் தேடுவேன் உன் சொந்தமே
1. ஆறாத் துயரில் நான் தவித்தபோது ஆறுதலாய் நீ வந்தாய்
கல்லும் முள்ளும் கடந்து வந்தேன்
கண்மணிபோல் எனைக் காத்தாய் (2)
என் இயேசுவே என் தெய்வமே
என்வாழ்விலே என்றும் இன்பமே
உந்தன் நிழலாய் நான் வாழுவேன்
உன் அருள் மொழியாய் நானாகுவேன்
2. துன்பங்கள் என்னை விழத்தாட்டும்போது
சிறகினில் எனைத் தாங்கிக் கொண்டாய்
சொந்தம் பந்தம் பிரிந்தபோது அன்போடு எனை அணைத்தாய் (2)
என் தேவனே என் தலைவனே என் வாழ்விலே என்றும் கீதமே
உந்தன் உறவில் நான் வாழவே
உன் அருள் என்றும் தாருமய்யா