♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும் - எந்தன்
எல்லாமும் நீயாக வேண்டும் (2)
சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும் (அன்புத்) - 2
1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும் (எந்தன்) - 2
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் (வரும்) - 2
2. போராட்டம் சூழ்ந்தென்னைத் தீவாக்கும் போது
பாலங்கள் நீயாக வேண்டும் (இணை) 2
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் (மறைப்) - 2