தூய நல் ஆண்டவரே துதிமிகு மன்னவரே


தூய நல் ஆண்டவரே துதிமிகு மன்னவரே

மாந்தரை மீட்டிடவே மரத்தினில் மரித்தீரோ


1. பன்னிரு வயதினில் ஆலயத்தில் - அன்று

அறிஞரால் புகழப் பெற்றீர்

கரங்களை விரித்தே கள்வனைப் போல் - கழு

மரத்தினில் தொங்கினீரோ


2. திருமணப் பந்தியில் கனிரசமே - அன்று

அருளிய திருச்சுதனே

குருதி சிந்தி கடற்காடியினை - இன்று

பருகிட நேர்ந்ததுவோ


3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு அருள்

வழங்கிய செம்மறியே

மண்ணவர்க்காக உம் உயிரை - இன்று

அளித்திட நேர்ந்ததுவோ