அன்னை மரியே ஆரோக்கியத் தாயே அணைத்திடும் அம்மா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்னை மரியே ஆரோக்கியத் தாயே

அணைத்திடும் அம்மா

இயேசுவில் இணைத்திடும் அம்மா அம்மா

இணைத்திடும் அம்மா


1. வானகத் தந்தையே வாழ்த்துச் சொல்லித் தெரிந்தவளே

வார்த்தையாம் தேவனின் தாயாய் திகழ்ந்தவளே

பெண்களாய் பிறந்ததிலே பெருமையில் சிறந்தவளே

கண்களாய் எமைக் காக்க கடலோரம் அமர்ந்தவளே


2. மூவொரு தேவனால் முடி கொண்டாடும் பெண்ணரசி

அன்பின் பிறப்பிடமே ஆண்டவர் இருப்பிடமே

அலகையை மிதித்தவளே அகிலங்கள் ஆள்பவளே

பாவிகள் புகலிடமே பக்தர்கள் அடைக்கலமே