♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆன்ம உணவாய் எனில் வந்து
அன்பு உறவில் எனை வளர்த்து
அந்தம் வரையில் என்னைக் காக்க
ஆதவனே உனை வேண்டுகிறேன் - உன்
ஆதரவையே நாடுகிறேன்
1. அச்சம் யாவும் நீக்கும் மருந்தாம்
அல்லல் யாவும் போக்கும் மருந்தாம்
நித்தம் உந்தன் உணவையே நான்
உண்ணும் வேளையில் உள்ளம் ஒன்றிப் போகுமே
உறவில் உள்ளம் மகிழ்ந்திடுமே
வருவாயே என் இறைவா வரம்
அருள்வாயே என் தலைவா
2. தாகம் யாவும் தணிக்கும் விருந்தாம்
தளர்ச்சி யாவும் நீக்கும் விருந்தாம்
நித்தம் உந்தன் குருதியை நான் பருகிடும் போதிலே
உள்ளம் உருகிப் போகுமே
ஊக்கம் நெஞ்சில் பிறந்திடுமே