உம் இரத்தத்தால் என்னைக் கழுவும்


உம் இரத்தத்தால் என்னைக் கழுவும்


1. உலகின் பாவம் போக்கும் இயேசுவே

மனிதனாய் மண்ணில் பிறந்த இயேசுவே

வியர்வையாய் திரு இரத்தம் சிந்திய இயேசுவே

கசையால் அடிபட்டு நொந்த இயேசுவே

முள்முடி தலையில் தாங்கிய இயேசுவே

என் பாவச் சிலுவையைச் சுமந்த இயேசுவே

எனக்காகச் சிலுவையில் அறையுண்ட இயேசுவே

சிலுவையில் தொங்கியே மரித்த இயேசுவே

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசுவே

பாவியைத் தேடி மன்னிக்கும் இயேசுவே