♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவன் அருகில் அமர்ந்து
அன்பைத் தரும் நேரம் இன்ப நேரம்
அவரே ஆன்ம உணவாய்
என்னில் வரும் நேரம் இன்ப நேரம்
1. குருதி சிந்தி எனை மீட்கும் நேரம்
உம்மை முழுதும் எமக்காக்கினாய்
அமைதி தேடி நான் ஓய்ந்த நேரம்
என்னைத் தேடி வந்து தேற்றினாய்
துயரங்கள் எனை வாட்டும் நேரம்
துணை நின்று வழிகாட்டினாய்
என் தேவன் எனைத் தேடி வந்த நேரம்
என் நிலை மாறுமே
என் இதயம் அவரிலே வாழுமே
2. வருந்தி வருந்தி தடுமாறும் நேரம்
உந்தன் தோளில் எனைத் தாங்கினாய்
எனது எனக்கு என்றே வாழ்ந்த நேரம்
பகிர்ந்து வாழ எனை மாற்றினாய்
உலகமே எனைத் தூற்றும் நேரம்
உறவென்று இன்று நீ வந்தாய்
உம் பார்வை பதிந்ததால் என்னை மறந்தேன்
உம் வழி வருகின்றேன்
உம் உடலை அனுதினம் பெறுகின்றேன்