அமைதியின் நல் காவலா என் அகத்தில் அமைதி தா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அமைதியின் நல் காவலா என் அகத்தில் அமைதி தா

அன்புருவே என் ஆனந்தமே இவ்வுலகில் அமைதி தா

நெஞ்சக அலைகள் மண்ணகப் புயல்கள் எல்லாம் மறைய வா

ஓ... எல்லாம் வல்லவா


1. துன்பத்தின் இருளைத் துரத்தும் சுடராய்

நீ வந்த இரவிலே அன்று நீ வந்த இரவிலே

நல்மனம் கொண்டோர்க்கு அமைதி என்றுதான்

விண்ணவர் பாடினார் வான் பாடகர் பாடினார்

தன்னலம் விரட்டி நல்மனம் தந்திட

மன்னவா மீண்டும் வா என் மனதில் அமைதி தா


2. அச்சங்கள் ஆசைகள் அன்றாடம் வென்றாலே

உள்ளத்தில் அமைதிதான் என் உள்ளத்தில் அமைதிதான்

கோபங்கள் ஜெயித்து தியாகங்கள் செய்தாலே

இல்லத்தில் அமைதிதான் நம் இல்லத்தில் அமைதிதான்

உள்ளத்தில் இல்லத்தில் அமைதி என்றால்

உலகில் அமைதிதான் நிறைவளமும் வாழ்வும்தான்