ஆணி கொண்ட உன் காயங்களை

ஆணி கொண்ட உன் காயங்களை  
அன்புடன் முத்தி செய்கின்றேன்     - 2
பாவத்தால் உம்மை கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2

1. வலது கரத்தின் காயமே
அழகு நிறைந்த ரத்தினமே
இடது கரத்தின் காயமே
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. வலது பாதக் காயமே
பலன் மிக தரும் நற்கனியே
இடது பாதக் காயாமே
திடம் மிக தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. திரு விலாவின் காயமே
அருள் சொரிந்திடும் ஆலயமே
உமது இதயக் காயமே
உயிரை ஈந்த உன்னதரே
அன்புடன் முத்தி செய்கின்றேன்