பாடும் எந்தன் ஜீவனில் என் பரமன் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாடும் எந்தன் ஜீவனில் என் பரமன் இயேசுவே

பாதை எங்கும் ஆனந்தம் என் பயணம் அவரினில் (2)

நேசம் கொண்டாடும் நெஞ்சம் பண்பாடும்

வானம் வந்தாகும் வசந்தம் மண்மீதே


1. இறைவனின் அருட்கரம் எந்தன் வாழ்விலே

இனியெல்லாம் வசந்தமே எந்தன் வானிலே

தேவனே என் தேவனே என் ஜீவனே

பாடும் எந்தன் ஜீவனில் நீ வா

பாதை எங்கும் பாதுகாக்க வா ஓ . . .


2. புலர்ந்திடும் புதுயுகம் புதிய வானிலே

புனிதனின் புதுவழி பூமி எங்குமே

வானிலே உலாவரும் என் கீதமே

வாழும் எந்தன் ஜீவ நாதமே

வாழ்க என்றும் தேவன் நாமமே ஓ . . .