என் ஆன்மா இறைவனையே

என் ஆன்மா இறைவனையே
ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது


1. 

தாழ்நிலை இருந்து தம் அடியவரைத்
தயையுடன் கண்கள் நோக்கினார் (2)
இந்நாள் முதலாம் தலைமுறைகள் - 2
எனைப் பேறுடையாள் என்றிடுமே


2. 

ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் (2)
அவர்தம் பெயரும் புனிதமாகும் - 2
அவருக் கஞ்சுவோர்க்கு இரக்கமாகும்