இறைவனின் திருக்குலமே வருக அரச குருகுலமே வருக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனின் திருக்குலமே வருக அரச குருகுலமே வருக-2

கறையில்லா கருணையின் கனிவுடன் காக்கும்

இணையில்லா இறைவனின் திருவடி பாடி

மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து

பணிவோம் அவர் பதமே


1. தாயின் கருவினில் தோன்றுமுன்பே

தயவாய் நம்மைத் தெரிந்தார்

தனிப்பெரும் கருணையில் நம் பெயர் எல்லாம்

தம் கையில் பொறித்து வைத்தார்

தாயாக நாளும் சேயாக நம்மை கண்போலக் காக்கின்றார்

இந்நாளில் நாமும் ஒன்றாகக் கூடி பண்பாடி பணிந்திடுவோம்


2. அரணும் கோட்டையும் கேடயமானவர் அவர் புகழ் பாடிடுவோம்

வாழ்வும் வழியும் வலிமையுமானவர் அவரடி பணிந்திடுவோம்

வற்றாத நதியாய் அருள்வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம்

அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம்

உலகோர்க்கு உரைத்திவோம்