வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்

வானவர் தாய் என நான் அடுத்தேன்

தங்கத் தமிழ்நாட்டில் மந்திர நகர் தன்னில்

தாயாக வந்த எங்கள் ஆரோக்கிய மாதாவே


1. எங்கெணும் உன் புகழ் திருகீதமே மக்கள்

இதயம் கசிந்து கண்ணீர் கதை கூறுமே

மங்கள பண்பாடும் எந்தன் நெஞ்சம்

திகழ்பிறை சூடும் உந்தன் திருப்பாதமே


2. பல கோடி மக்களுக்குப் பார்வை தந்தாய்

நடமாடும் முடவர்க்கும் அருள் புரிந்தாய்

நலம் காண ஊமையைப் பேச வைத்தாய்

மரக்கலம் போலத் தவித்தோரை வாழவைத்தாய்


3. காணிக்கைப் பொருள் கோடி காவியம் கூறும்

கழல் பணிந்தோர்க்குப் பசி நோயெல்லாம் தீரும்

மாணிக்க மேடை உந்தன் திருக்கோவில்

மலர்ப்பதம் பாராமல் தீராதென் ஆவல்