♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அம்மா நீ தந்த செபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2)
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2)
1. சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய்
நின்றாய் - எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு
மகனானார் - அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும்
காணாமல் தேடிப் புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே
2. துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள்
கண்டோம் - உயர் வாழ்விழந்த எமக்காக உன்மைந்தன்
உயிர் தந்தார் - அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும்
வாட்டிய சிலுவைப்பாடுகளும் - சாய்த்திட்டக் கோரம்
பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார்
3. மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக்
கண்டோமே - சாகாமை கொண்ட நின் மகனார் சாவினை
வென்றெழுந்தார் அவரே ஆவியால் உன்னை நிரப்பியதும்
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் மூவுலகரசி ஆக்கியதும்
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே