♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மனிதா ஓ மனிதா நீ மண்ணாய் இருக்கின்றாய்
மண்ணுக்கே திரும்புவாய் நினைவில் வை -3 ஓ மனிதா
1. இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இறைவனின் இரக்கம் வேண்டிப் பெறுவோம் (2)
பழையன விடுத்து புதியன புனைவோம் - 2
புனிதத்தில் நிலைத்து புதுப் படைப்பாவோம் - 2
2. கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் (2)
சாம்பலை அணிந்து செபதவம் புரிந்து - 2
சாவினைக் கடந்து வாழ்வினில் நுழைவோம் - 2