ஓடோடி எங்கோ சென்றேன் நாடோடி வாழ்வைக் கண்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஓடோடி எங்கோ சென்றேன் நாடோடி வாழ்வைக் கண்டேன்

நான் தேடும் அமைதி உன் உள்ள நியதி

நீயின்றி நானில்லை என் இறைவா


1. பணமென்றும் பொருளென்றும் பல பாதை சென்றாலும்

நான் தேடும் அமைதியில்லை

பேரென்றும் புகழென்றும் என் வாழ்வில் கண்டாலும்

பெருந்துன்பம் விலகாது அமைதியில்லை


2. அறிவோடு நிறைந்தாலும் அறியாமல் வாழ்ந்தாலும்

குறை என்றும் வாழ்வில் உண்டு

குறை போக்கி வாழ்வினையே நிறைவாகச் செய்தாலே

நீ என்னில் வந்திடுவாய் அமைதியுண்டு


3. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் வாழ்வு சிறப்பாகும்

என் எண்ணம் உயர்ந்திருந்தால

நான் வாழும் வாழ்வினிலே நிலையாக உனைப்பற்றி

வாழ்ந்தாலே நலமாகும் அமைதியுண்டு