நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி

ஏழிசைக்கு நீ காற்றாகி இன்பம் சுரக்கும் நல் ஊற்றாகி

நினைக்க நினைக்க நெஞ்சம் தித்திக்க தித்திக்க

வரம் கொடுக்கும் அன்னையே அம்மா அம்மா அம்மா

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே


1. மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்

மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா

நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே

தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே


2. வேளைநகர் வந்த விண்ணவர் தாயே

வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே

தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே

கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே