ஆரோக்கிய மாதாவே உமது புகழ்

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் - எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் - 2

1. அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே - 2
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2

2. தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே - 2
வானுலகும் இந்த வையகமும் - அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே - 2

3. முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே - அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே - 2
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே - 2

4. பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே - 2 - இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் - 2

5. சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே - 2
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே - 2

6. கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே - 2 - நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே