♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்
1. எளியோருக்கு நற்செய்தி சொல்லவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என
அறிவிக்கவும் ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
உன்னை அன்று அழைத்ததும் நாமே
உரிய பெயரை வைத்ததும் நாமே
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பதும் நாமே
2. நிறை உண்மைக்குச் சாட்சி சொல்லவும்
நோயுற்றோரை குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலைத் தான் கடந்தாலும்
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அணைத்து உன்னை வழிநடத்துகின்றோம்