காணிக்கை தருகின்றோம் உளமதில் உள்ளதை மகிழ்வோடு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை தருகின்றோம்

உளமதில் உள்ளதை மகிழ்வோடு

உழைப்பின் விளைவையும் இணைத்து உந்தன்

பலியினில் நிறைத்திட அளிக்கின்றோம் (2)

இதை ஏற்பாய் நல் இயேசுவே எதையும் அன்புடன் ஏற்பவரே -2


1. கோதுமை மணிகள் மடியும் மண்ணில் நிறைந்த பலன் தரவே

மடிவோம் நாமும் தினமும் வாழ்வில் உண்மை நிலைபெறவே

துன்பம் நிறைந்த வாழ்வை முழுதும்

உந்தன் பாதம் அளிக்கின்றோம் (2)

கனிந்த மனதுடன் ஏற்று எமக்கு இனிமை வாழ்வில் பொழிவீரே


2. மலரும் மணமும் பிரிந்து இருந்தால் மலரில் அழகில்லையே

மனிதன் மனதில் அமைதி இழந்தால் வாழ்வில் சுவையில்லையே

இன்று உலகில் மாந்தர் தேடும் அமைதி எங்கும் கிடைத்திட -2

புதிய வாழ்வை அளிக்கும் தேவா பலியாய் எமையே ஏற்பீரே