♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்ணக விருந்தே வா வினை தீர்க்கும் மருந்தே வா
என்னகம் எழுந்து வா மன்னவா மகிழ்ந்து வா (2)
என்னுள்ளம் உமக்காக ஏங்கித் தேடுதே
என்னிடம் உள்ளதெல்லாம் வழங்கி மகிழவே (2)
இறைவா வாராய் வரமே தாராய் -2
1. அலைகடல் நடுவே அசைந்திடும் படகாய்
தவித்திடும் வேளையிலே
அருட்கரம் நீட்டி கரைதனில் சேர்த்து
நிலைபெற உயர்த்தி விட்டாய் (2)
காலங்கள் மாறினும் உம் அன்பு மாறாதய்யா - 2
ஜீவியம் தோறும் காவியம் பாட ஆவியைப் பொழிந்திட வா
2. உண்பது அப்பம் ஒன்றே ஆகினும் உண்பவர் ஆயிரமே
வேதங்கள் படித்து பேதங்கள் அகற்றி
நட்பினில் வளரச் செய்வாய் (2)
தோழமை உறவினிலே உள்ளதைப் பகிரச் செய்வாய் - 2
சமத்துவம் படைத்து சாட்சியாய் வாழ்ந்திட
உம் அருள் பொழிந்திட வா