♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அருளின் ஊற்று என்னிலே பாய்ந்து வளமை கூட்டிடுமே
இயேசு உந்தன் அன்பின் வரவால் உவகை பூத்திடுமே (2)
வாருமே வாருமே இயேசு தெய்வமே வாருமே
வாழுமே வாழுமே எந்தன் மனதை ஆளுமே
1. விந்தைகள் மிகுந்த விண்ணவன் இல்லமாய்
சின்ன என் இதயம் அமையுமோ
சிந்தையில் தகுந்த அன்பையும் கொண்டு நான்
உன்னிலே கரைய இயலுமோ (வாருமே)
2. நின்பதம் அபயம் கொண்டிடத் துடிப்பேன்
உந்தனின் சிறகு விரியுமோ
உன் கரம் பிடித்து நடக்கப் படிப்பேன்
அன்பில் உன் கரமும் அணைக்குமோ (வாருமே)
3. உன்னிலே பருக எண்ணியே வந்த என்
நெஞ்சமும் அமைதி அடையுமோ
உண்மையின் உருவே என்னில் நீ தங்கவே
என்னகம் மலர்ந்து நிறையுமோ (வாருமே)