♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவா எழுந்தருள்வாய் - எந்தன்
இதயத்தில் வந்தருள்வாய்
கறைகளைக் கழுவிடுவாய் - உந்தன்
இதயம் போல் மாற்றிடுவாய்
1. உலகினைப் படைத்து உயிரினைக் காக்கும்
இறைவா எழுந்தருள்வாய்
அலகையை அடக்கி அமைதியைத் தந்த
எந்தனின் இதயம் அமைதியைக் கண்டிட
உந்தனின் அமைதியை உலகமும் கண்டிட
2. நொறுங்கிய உள்ளமும் மலர்ந்திடக் கனிந்திட
குறுகிய மனமும் பரந்திட விரிந்திட
பொய்மையும் பகைமையும் ஒழிந்திட மறைந்திட
வாய்மையும் அன்பும் வளர்ந்திட வாழ்ந்திட