சிலுவையை நிமிர்ந்து பாராயோ அதன்
புதுமையைக் கொஞ்சம் கேளாயோ
உலகமே - 4
1. பாவியை மன்னிக்கும் சிலுவையிது
புது ஆவியைத் தந்திடும் சிலுவையிது
துன்பத்தைப் போக்கிடும் சிலுவை இது - 2
மனத் துயரத்தை நீக்கிடும் சிலுவை இது
சிலுவை இது - 4
2. குறைகளை அகற்றிடும் சிலுவை இது
பல நிறைகளை அளித்திடும் சிலுவை இது
மரணத்தை வென்ற சிலுவை இது 2
பலர் மானத்தைக் காத்த சிலுவை இது
சிலுவை இது - 4