துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான்


துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் - நம்

இறைமகன் எனக்கினி தோழனே தோழனே


1. தீதானவை வழியானது என்

பாவங்களும் மிகையானது

என் பாவக் கறையை நீர் நீக்கி

என் வாழ்வில் இன்பம் தந்தீரே

கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்

என்னைத் தந்தேன் நானே


2. தேவாவியே துணையானது என்

கோபங்களும் கரைந்தோடுது

என் சோகக் குரலை நீர் கேட்டு

பாவநோயின் துன்பம் தீர்த்தீரே

எந்நாளும் விலகி தனிவாழும் போதும்

உந்தன் பிள்ளையானேன்