இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்

தாய்மையின் நினைவாலே அம்மா


1. தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா - 2

ஈன்ற தாயும் போற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன் அம்மா


2. வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் - 2

உண்மை மனதும் உயர்ந்த நெறியும்

நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா