வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா

வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா
வழியிருளினிலே வளர்மதியென வா
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா


1. 

அலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர (2)
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா


2. 

இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே (2)
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா