♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உள்ள உயிராக எழுவீர் தேவனே
உண்மை உணவாக வருவீர் இறைவனே
1. நெஞ்சில் சாய்ந்தே நான் அன்பைப் பருகிட
தஞ்சமாக வந்தேன் தங்க இடமே தா
விண்ணக அமைதியும் நெஞ்சம் நிறைந்திட
விண்ணின் வேந்தனே எந்தன் உள்ளம் வா
2. உலகம் இணைவது உந்தன் அன்பிலே
உள்ளம் நிறைவது உந்தன் அருளிலே
அன்பைப் பொழியவே உறவில் இணையவே
இன்ப ஊற்றாக இனிய உறவே வா