இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்

நிதம் துணை சேர்ப்பாயே


1. ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை

தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள்

மாறாத கொடுமை நீங்காத வறுமை

தானாக என்றுமே மாற்றிடுவாள்


2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி

உள்ளம் திறந்து சொல் உன் கதையை

வெள்ளம் போல் அருள் கருணை பாய்ந்திட

தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய்