உறவைத் தேடி இறைவன் இங்கு வருகிறார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உறவைத் தேடி இறைவன் இங்கு வருகிறார்

நிறைவைத் தந்து நம்மில் இன்று வாழ்கிறார்

உள மகிழ்ச்சியில் நமை நிறைத்திட

அவர் மாட்சியில் நாம் நிலைத்திட

மனக்கதவைத் திறந்து அன்பை நாளும் பொழிகிறார்


1. அமைதி அன்பு நிலைத்திடவே அருமைத் தோழனாய்

அழைத்துச் செல்ல நேசக்கரம் நீட்டி வருகிறார் (2)

காடும் மலையும் கடலின் அலையும் என்ன செய்திடும்

அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் (2)


2. உரிமை வாழ்வைத் தந்திடவே உண்மை நண்பனாய்

உணர்வுபெற்று வாழ்ந்திடவே உயிர்த்து வருகிறார் (2)

சாவும் பிணியும் பேயின் பிடியும் என்ன செய்திடும்

அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் (2)