மூவொரு இறைவா சரணம் முழுமுதல் தலைவா சரணம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மூவொரு இறைவா சரணம்

முழுமுதல் தலைவா சரணம்

அடியேன் உன் பதம் சரணடைந்தேன்

படைப்பின் சிகரமாய் எனை மாற்றி

பதரான என் நிலை உயரச் செய்தாய்

போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே

பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே


1. சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய்

மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்

அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா

அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்

அடிமை என் மாண்பினை உயரச்செய்து

அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய்


2. பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய்

உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய்

வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா

சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்

அமைதியின் தூதனாய் எனை மாற்றி

அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்