எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எனது சனமே நான் உனக்கு

என்ன தீங்கு செய்தேன்? சொல்

எதிலே உனக்குத் துயர் தந்தேன்?

எனக்குப் பதில் நீ கூறிடுவாய்


1. எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே

அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தந்தாய்?


2. நான் உனக்காக எகிப்தியரை அவர்தம்

தலைச்சன் பிள்ளைகளை வதைத்து ஒழித்தேன்

நீ என்னைக் கசையால் வதைத்துக் கையளித்தாய்


3. பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி

எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்

நீயோ என்னைத் தலைமையாம்

குருக்களிடத்தில் கையளித்தாய்


4. நானே உனக்கு முன்பாக கடலைத்திறந்து வழி செய்தேன்

நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே