♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இன்பம் தேடும் இதயமே இயேசுவிடம் போ
பேரின்பம் தரும் வாழ்வின் ஊற்று அவரே அவரே -2
1. இனிது இனிது அவரருளும் திருவிருந்து
புனிதரெல்லாம் சுகங்கண்ட அருமருந்து (2)
கனிந்துவிடும் கல்மனமும் அவர் தொடும்போது -2
தணிந்துவிடும் நம் துயரம் அவர் வரும்போது
2. எளிய மனதில் ஏற்றம் தரும் திருவிருந்து
இன்னல்களைத் தடுத்தாளும் உடனிருந்து (2)
வலிமையுடன் வாழச் செய்யும் பேராற்றலிது -2
வறண்டுவிடா வளமருளும் அனுதினம் சுரந்து