எழிலின் வடிவாம் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எழிலின் வடிவாம் இறைவா

என் உள்ளத்தில் எழுந்திடு கனிவாய்

அருளின் ஊற்றாம் இறைவா

என் சுமைகளை நீக்கிடு நிறைவாய்

அன்பின் சிகரமாம் இறைவா

என் வாழ்வினைக் காத்திடு தயவாய்

இயேசுவே வாரும் உளமதில்

வாழும் என்னிலே வந்து தங்கும்


1. மனமென்னும் சோலையில் ஆலயம் அமைக்கின்றேன் -2

கீதங்கள் முழங்கிட உன்னை வாழ்த்திப் பாடுவேன் -2

அருள் தர வேண்டுகின்றேன் -2 என் இயேசுவே ...


1. ஒளிதரும் வழியினில் வாழ்ந்திட வருகின்றேன் -2

அருளையும் அன்பையும் பொழிந்திட அழைக்கின்றேன் -2

அருள் தர வேண்டுகின்றேன் -2 என் இயேசுவே ...