என் இயேசு நீ வரவேணும் எனக்காக நீ வரவேணும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இயேசு நீ வரவேணும் எனக்காக நீ வரவேணும் -2

சீக்கிரமா நீ வரவேணும் நான் சிரிச்சு பேசி மகிழ வேணும்

உன் பிள்ளை எனை நீ -2 ஆசீர்வதிக்க வேணும் -2


1. கேளுங்கள் தருவேனென்னு சொன்னது நீதானே -2

நான் கேட்கிறது உன் வார்த்தை மட்டும்தானே -2

என்னோடு நீயிருந்தா ஆடி ஓடி மகிழ்வேன்

என்னோடு நீயிருந்தா பாட்டுப்பாடி சிரிப்பேன்


2. தேடுங்க கிடைக்குமுனு சொன்னது நீதானே -2

நான் தேடுறது உன் அன்ப மட்டும்தானே - 2

என்னோடு நீயிருந்தா...

தட்டுங்க திறப்பேனென்னு சொன்னது நீதானே -2

நான் தட்டுறது உன் வீட்ட மட்டும்தானே -2

என்னோடு நீயிருந்தா...