இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர் இறைவா உம்மிடம் வந்தடைக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்

இறைவா உம்மிடம் வந்தடைக


1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்

நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2)

தீயவை யாவும் விலகிடுக - 2 - அவர்

தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக


2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்

மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க (2)

புனிதர் வான தூதருடன் - 2 - உம்மை

புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக