♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சின்னச் சின்ன ஆட்டுக் குட்டி நானையா
மெல்ல மெல்ல நடத்திடு இயேசையா (2)
இயேசையா என் இயேசையா - 4
1. குளிர்ந்த நீர் உள்ளதோர் ஓடையின் அருகே
என்னை வழி நடத்தும் என் இயேசையா (2)
பசுமை நிறைந்த வயல்களின் நடுவே
என் கரம் எடுத்தெம்மை நடத்துமையா (2)
இயேசையா என் இயேசையா - 4
2. இருள்நிறை பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உன் கரம் என்னையே வழிநடத்தும் (2)
எனக்கென உள்ளதோர் ஆசை ஒன்று
உன் இல்லம் நான் வந்து சேரவேண்டும் (2)
இயேசையா என் இயேசையா - 4