இதய கீதம் இசைத்து வந்தேன் இதய தெய்வமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதய கீதம் இசைத்து வந்தேன் இதய தெய்வமே

இதயம் மகிழ உன்னை அழைத்தேன் இதய தெய்வமே

இரங்கி வா இனிதே வா என்னில் வா எழுந்து வா -2


1. நீரின்றி வாடும் செடியைப்போல

நீயின்றி என் வாழ்வு வாடிப்போகும் ஆ... (2)

கார்மேகம் கண்டு களித்திடும் மயில் போல் -2

கலக்கம் நீக்கி களித்திடவா


2. ஓசை இல்லாத வெண்கலம் போல

நீ இல்லா வாழ்வும் மாறிப்போகும் ஆ (2)

ஆதவன் கண்டு மலர்ந்திடும் மலர் போல் -2

நறுமணம் வீசி மகிழ்ந்திடவா